இன்றைய ஸ்பெசல் ரண்டக்க

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நன்பனும்
இல்லைன்னு சொன்னது தப்பாபோச்சு?

ஏன் ?

நிரந்தர பதவியும் இல்லைன்னு சொல்லி சீட் தரலை!

----------------------------------------------------------------------------------------------------

அரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்
சின்ன வித்தியாசம்தானா... எப்படி?'
'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்
மின்சாரமே கனவு!'

----------------------------------------------------------------------------------------------------

சார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் !

என்னவாம் ?

நிலம் நிலமறிய ஆவல்னு !

----------------------------------------------------------------------------------------------------

தலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு ?

தன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் !
----------------------------------------------------------------------------------------------------

தலைவருக்கு சீட் கிடைச்சதில் தலைக்கால் புரியலை !!

என்ன ?

கழுத்தில விழுந்த மாலையை கழட்டி வீசுரதுக்கு பதிலா
வேட்ட்யியை அவிழ்த்து வீசுறாரே !...-------------------------------------------------------------------------------------.
அந்த நடிகரைக் கட்சியில சேர்த்தது தப்பாப்போச்சு'

'ஏன் என்னாச்சு?'

'ஒன் டே முதல்வராகணும்னா எந்தத் தொகுதியில நிக்கணும்னு கேக்குறாரு!'.

-------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தக் கதையை சினிமாவா எடுக்க நான் பத்து வருஶம்
தவம் இருந்தேன் !'

ஏன் ?

'இதே கதையை வெச்சு, இதுக்கு முந்தி வந்த படத்தை ஜனங்க
மறக்க வேணாமா ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னங்க இது..... இன்றைய ஸ்பெசல் ரண்டக்க கூட்டு... ரண்டக்க சாம்பார்னு எழுதியிருக்கு?'

'ஹி ஹி வெண்டக்காயத்தான் அப்படி சீஸனுக்கேத்த மாதரி எழுதி இருக்கோம்!'

-------------------------------------------------------------------------------------------------------------------------------

Related Posts Plugin for WordPress, Blogger...