புலி வாலை மிதிச்சா ‘சங்கு’..

என்னதான் பில் கேட்ஸோட பையனா இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும்போது, கடன் வாங்கித்தான் ஆகனும்.
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.  இதுதான் உலகம்.
------------------------------------------------
இளநீர்லயும் தண்ணி இருக்கு., பூமிலயும் தண்ணி இருக்கு., அதுக்காக இளநீர்ல போர் போடவும் முடியாது., பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.  என்ன நா சொல்றது சரிதானே.
------------------------------------------------
ஓடுற எலி வாலை புடிச்சா நீ ‘ கிங்’கு…  ஆனா தூங்குற புலி வாலை நீ மிதிச்சா  உனக்கு ‘சங்கு’..
------------------------------------------------
சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா… ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா?   இல்ல………. பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
------------------------------------------------
என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும் அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
------------------------------------------------
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி நாம ஓடலாம்.  ஆனா… ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நாம நிக்க முடியாது.
-----------------------------------------------
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்.  அதுக்காக  மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
-----------------------------------------------
டிசம்பர் 31 க்கும், ஜனவரி 1 க்கும் ஒரு நாள்தான் வித்தியாசம். ஆனால், ஜனவரி 1 க்கும், டிசம்பர் 31 க்கும், ஒரு வருசம் வித்தியாசம்.. இதுதான் உலகம்.

Related Posts Plugin for WordPress, Blogger...