காதல் அருவி

என்னமோ தெரில என்ன மாயமோ தெரில இப்பல்லாம் காதல்  அருவி மாதிரி கொட்டுது...


பூமிக்கு ஒரு துணைக்கோள்
என்று சொன்னவன் முட்டாள்
மொத்தம் மூன்று...
உன்னையும் உன்தங்கையையும் சேர்த்து


ராத்திரி உன்னால் எனக்கு
தூக்கம் கெட்டுப்போகிறது...
இனிமேல் எங்க வீட்டு கொசுவத்தியை
ஆட்டையைப்போடாதே...


அன்பே உன்னை நினைத்து
காலை,மதியம் சாப்பாடே இறங்கவில்லை
ராத்திரி ஒரு புல் கட்டு கட்டிடறேன்...


அன்பே இந்த கடல் அலைகளுக்கு கண்ணில்லை
இருந்திருந்தால் உன்னைப்போன்ற மொக்கை பிகரை
பார்க்க திரும்பு திரும்ப வராது...


உனக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது
எனக்கும் திருமணம் நிச்சயமாகிவிட்டது
நம் காதல் ஜெயித்துவிட்டது...காதல் அழிவதில்லை


அன்பே எதிர்காலத்தில் என் மகன் உன் மகளை
காதலிக்க நான் விரும்பவில்லை
நீ மட்டும் சரி என்று சொல் இரண்டுபேரையும்
அண்ணன் தங்கைகளாக்கிவிடலாம்


உங்கப்பாவுக்கு அறிவே இல்லை...
இருந்திருந்தால் பெண்ணை பெத்தவர்
சொத்து சேர்க்காமல் இருந்திருக்கமாட்டார்


அன்பே உன்னை காதலிக்க ஆரம்பித்தபின்
நான் அதிகம் செலவழிப்பதேயில்லை
என் கிரடிட் கார்டுகளை எப்போ திரும்ப தரப்போகிறாய்???


அன்பே இந்த உலகத்தில் கடன் வாங்காதவன்
நான் ஒருவனாகத்தான் இருக்க முடியும்
நீ வாங்கிய கடனை அடைத்து தீரும்வரை...


இதயத்தை திருடவா என்று நான் கேட்டதற்கு
கிட்னியை திருடி வித்துடாதே என்றாய்
கிட்னிக்கும் இதயத்துக்கும் வித்தியாசம் தெரியாத
உன்பின்னாலும் என்னை அலைய வைக்கிறது
உங்கப்பன் சேர்த்து வைத்த சொத்து...
Related Posts Plugin for WordPress, Blogger...