தேவதைகள் கிரேக்கத்திலிருந்து வருபவர்கள்

உங்கள் காதலை காதலியிடம் வித்தியாசமாகச் சொல்ல...

1. உங்கள் பெண்ணிற்குப் பின்னால் செல்லுங்கள்... சென்று உங்கள் விரல்களை துப்பாக்கி போன்று வைத்துக் கொள்ளுங்கள்...

திடீரென 'you are under arrest' என்று சொல்லுங்கள்.
அவர் பயந்து 'ஏன் ஏன்' என்று கேட்பார்.
உடனே 'என் இதயத்தைத் திருடிய குற்றத்திற்காக' என்று சொல்லுங்கள்...

2.  பெண் அணிந்திருக்கும் ஆடையை நன்றாக உற்றுப் பாருங்கள்...

உடனே அவர் கோபமாக 'ஏய்! என்ன செய்யிறாய்?' என்று கோபமாகக் கேட்பார்..
உடனே...
'இல்லை... Made in heaven' என்று எங்காவது இருக்கிறதா என்று பார்க்கிறேன்' என்று சொல்லுங்கள்...


3. பெண்ணிடம் சென்று 'உன் கால்கள் வலிக்கின்றனவா?' என்று கேளுங்கள்...

பெண் 'ஏன்' என்று கேட்பார்...
உடனே... 'இல்லை... நேற்று முழுதும் என் மனது முழுவதும் நீ தான் நினைவாக ஓடிக் கொண்டிருந்தாய் அதனால் தான்' என்று சொல்லுங்கள்...


4. பெண்ணிடம் சென்று 'உனது இதயத்திற்கான பாதையை எனக்குச் சொல்வாயா? உன் கண்களிலேயே என் பாதையைத் தவறவிட்டுவிட்டேன்' என்று சொல்லுங்கள்..5. பெண்ணிடம் செல்லுங்கள்.. சென்று 'நீங்கள் கிரேக்கத்திலிருந்தா வருகிறீர்கள்?' என்று கேளுங்கள்...

அவர் இல்லை என்றதும்,
'ஓ! எல்லாத் தேவதைகளும் கிரேக்கத்திலிருந்து வருபவர்கள் என்று நான் நினைத்தேன்' என்று சொல்லுங்கள்...


6. என்னிடம் 11 றோசாப் பூக்களும் நீயும் இருந்தால் என்னிடம் மொத்தமாக 12 றோசாக்கள் இருக்கும்' என்று சொல்லுங்கள்....


(அடி வாங்கினால் சங்கம் பொறுப்பில்லை.

அனுபவமா என்ற கேள்வி தடை செய்யப்படுகிறது)
Related Posts Plugin for WordPress, Blogger...