சசிகலாக்கு சொர்க்கத்துக்குச் செல்ல டூர் வாய்ப்பு கிடைத்ததாம்


   எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு நையாண்டி இது. புரட்சித்தலைவியின் உடன்பிறவா சகோதரி சசிகலா அம்மையாருக்கு சொர்க்கத்துக்குச் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்ததாம். சொர்க்கத்துக்கு டூர் போனவர் அங்கே எமதர்மராஜனை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

எமதர்மராஜனின் அறை முழுவதும் கோடிக்கணக்கான வால்கிளாக் போன்ற கருவிகள் இருந்திருக்கிறது. அந்தக் கருவியில் ஒரே ஒரு முள் மட்டும் இருந்திருக்கிறது. "அது என்ன" என்று சசிகலா கேட்டிருக்கிறார்.

அதற்கு எமதர்மராஜன் "இந்த இயந்திரம் மூலம் பொய் பேசுபவர்கள் எவ்வளவு பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். ஒவ்வொரு மனிதரும் ஒரு பொய் பேசும் போது முள் ஒரு முறை சுற்றி வரும். கீழே இருக்கும் கவுண்டரில் முள் எத்தனை முறை சுற்றி வந்தது என பதிவாகும். இதன் மூலம் மனிதர்கள் எவ்வளவு பொய் பேசினார்கள் என்று அறிந்து அதற்கேற்ற தண்டனையைக் கொடுப்போம்" என்றிருக்கிறார்.

இந்த கான்செப்டில் மிகவும் கவரப்பட்ட சசிகலா சில பேரின் பொய் பேசும் இயந்திரங்களை சுற்றிப் பார்த்தார். கவுதம புத்தரின் இயந்திரத்தில் முள் ஒரு முறை கூட சுற்றாமல் கவுண்டர் ஜீரோவிலேயே இருந்திருக்கிறது. அடுத்ததாக மகாத்மாவின் இயந்திரத்தை சென்று பார்த்திருக்கிறார். முள் மூன்று முறை சுற்றியிருக்கிறது.

வேறு யாரோ ஒருவருடைய இயந்திரத்தை சசிகலா தேடிப் பார்த்திருக்கிறார். அது கிடைக்கவேயில்லை. சசிகலா மீண்டும் மீண்டும் தேடிப் பார்ப்பதைப் பார்த்த சித்திரகுப்தன், "மேடம். மே ஐ ஹெல்ப் யூ" என்று கேட்டார்.

உடனே சசிகலா, "அக்காவோட பொய்பேசும் இயந்திரம் இங்கே காணுமே? அது எங்கே" என்றார்.

"மேடம் இந்த அறையிலே உங்க தலைக்கு மேல ஓடிக்கிட்டிருக்கிற மின்விசிறி தான் உங்க அக்காவோட பொய் பேசுற இயந்திரம்" என்றாராம் சித்திரகுப்தன்.


Related Posts Plugin for WordPress, Blogger...