ஒரு கதை சொல்லப்போறேன்

எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப்போறேன்...

குல்லா விக்கிற நம்ம ராமசாமி அங்கிள் ஒரு காட்டு வழியா வந்துகிட்டு இருந்தாரு. தலைமுறை தலைமுறையா ராமசாமி அங்கிள் குடும்பத்துக்கு இந்த குல்லா விக்கிறததான் பொழப்பு. ஊர் ஊரா கொண்டுப்போய் குல்லா வித்துட்டு வருவாங்களாம்.

தாத்தா, தந்தைக்குப்பிறகு கடைசிவாரிசான ராமசாமி அங்கிள் குல்லா விக்க ஆரம்பிசிட்டாரு. அப்படித்தான் ஒரு நாளு காட்டு வழியா வரும்போது ரொம்ப களைப்பான ராமசாமி அங்கிள் குல்லா வச்சிருந்த பொட்டியை கீழ வச்சுட்டு ஒரமா மரத்தடில தூங்க அரம்பிச்சுட்டாரு.

ரொம்ப நேரம் கழிச்சு தூங்கி எந்திருச்சுப்பார்த்தா பொட்டில ஒரு குல்லா கூட இல்லை. எங்கன்னு பார்த்தா மரத்துமேல குரங்குகள் எல்லாம் ஆளுக்கொன்னா தலைல வச்சுட்டு ராமசாமி அங்கிளைப்பார்த்து எகத்தாளம் பண்ணிச்சாம்.

அடடா, இதுங்க அட்டகாசம் தாங்க முடிலயே... என்னப்பாண்ணலாம்னு யோசிச்சவருக்கு அவரோட தாத்தா சொன்னது ஞாபகம் வந்துடுச்சு. ஒருதடவை அவர் தாத்தா முனுசாமி இதுமாதிரி குல்லா விக்க வரும்போது மரத்தடி கீழே படுத்து தூங்க இதே மாதிரி குரங்குகள் வந்து குல்லாவை தூக்கிட்டு போய்டுச்சாம். அபபோ அவரு ஒரு கல்லைத்தூக்கி குரங்கு மேல எறிஞ்சாரு...பதிலுக்கு குரங்குகள் குல்லாவை தூக்கி அவர் மேல எறிய எல்லா குல்லாவையும் பொறுக்கிட்டு வந்துட்டாராம்.


இந்தமாதிரி பிரச்சனை வந்தா கல்லைத்தூக்கி குரங்கு மேல எறியனும்னு தாத்தா சொல்லிக்கொடுத்திருந்தாரு, அதையே பண்ணிருவோம்னு ராமசாமி அங்கிள் ஒரு கல்லைதூக்கி குரங்கு மேல எறிஞ்சாரு...

குல்லா திரும்ப வரும்னு காத்துகிட்டவருந்தருக்கு பெரிய அதிர்ச்சி...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
குரங்கு மேல எறிஞ்ச கல்லை ஒரு குரங்கு கேட்ச் பிடிச்சு அதை திரும்ப ராமசாமி அங்கிள் மேல எறிஞ்சுட்டே சொல்லுச்சாம்... "அடங்கொன்னியா...உனக்கு மட்டும்தான் தாத்தா இருக்காரா...எங்களுக்கும் தாத்தா இருக்காரு...அவரோட பிளாஷ்பேக் கதைய எங்களுக்கும் சொல்லிருக்காரு".... ஓடியேப்போயிருன்னு சொல்லிச்சாம்...


இதுனால அறியப்படும் நீதி என்னன்னா...

1. எதிரியோட பலம் தெரிஞ்சு மோதனும்

2. யாரையும் குறைவா மதிப்பிட கூடாது

3. காலத்துக்கு ஏத்தமாதிரி பிராக்டிக்கலா யோசிக்கனும்..
Related Posts Plugin for WordPress, Blogger...