லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை...?


   "போருக்கு போற மன்னர் பொற்காசுகளை மூட்டையா கொண்டு போறாரே.....எதுக்கு?" "போர்க்களத்துல அதை வீசி, எதிரி படைவீரர்களை திசை திருப்பத்தான்"!

"டாஸ்மாக்ல வேலை பார்க்கறதும், டெய்லர் கடையில வேலை பார்க்கறதும் ஒண்ணுதான்...." "ஏன்னா, ரெண்டு கடையிலயும் வர்றவங்ககிட்ட "ஆஃபா', 'ஃபுல்லா'ன்னுதான் முதல்ல கேக்கணும்!

"எக்ஸ்ரே எடுக்க எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்...?" "நீங்க பாக்கெட்ல இருந்து பர்ஸை எடுக்க ஆகுற நேரம் தான்...!"

"லீவ் லெட்டருக்கும் லவ் லெட்டருக்கும் என்ன வித்தியாசம்....?" லீவ் லெட்டரை டீச்சர்கிட்ட கொடுக்கணும்; லவ் லெட்டரை டீச்சரோட பொண்ணுகிட்ட கொடுக்கணும்!

"உங்களை மரியாதைக் குறைவா திட்டிட்டேன்னு மனசு சங்கடமாவே இருந்தது..." "அதுக்காக மன்னிப்பு கேட்க வந்திருக்கீங்களா....?" "இல்லை... மரியாதையா திட்டிட்டுப் போலாம்னு வந்தேன்!"

-------------------------------------------------


இதையும் படிச்சி பாருங்க  

படிப்பவனை கெடுக்காதே...!


  புண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே!  கடவுளே...


காந்தி என்கிற நெருப்பு


  தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன    உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்   ...
read more...


Related Posts Plugin for WordPress, Blogger...