காதல் கடிதம்

உனது திருமண பத்திரிக்கை
கண்டு கண்ணீர் பெருகுதுடி
அன்று விடுமுறை இல்லை
கல்யாண சாப்பாடு நஷ்டமடி

==

பேருந்தில் உனக்கும் சேர்த்து
இரண்டு வருடமாக
டிக்கெட் எடுக்கிறேன்
ஐ லவ் யு சொல்லிவிடு
இல்லை கணக்கு பார்த்து
பைசல் பண்ணிவிடு

==

எனது காதல் கடிதத்தில்
இலக்கணப்பிழை என்று நீ
எழுதிய கடிதத்தில் ஆயிரம்
எழுத்துப்பிழைகள்

==


பரிட்சைக்கு
பிட்டு அடிக்க "சிட்டி"ரஜினி
மாதிரி உதவ
சொல்கிறாயே
நீ என்ன ஐஸ்வர்யா ராயா?

==

இனி மிஸ்டு கால்
கொடுப்பதை நீ
நிறுத்திவிடு
ஏர்டெல் கம்பெனி
உன்னிடம் நஷ்டஈடு
கேட்டு வழக்கு
தொடரலாம்

==

காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
என் எதிரியின்
முகவரி
தருகிறேன்

==
Related Posts Plugin for WordPress, Blogger...