ஆன் பண்ணாத டிவிக்கு எப்படி வால்யூமை குறைக்கிறது

தொலைக்காட்சியில்  தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்…..
“ஹலோ வணக்கம்!”
“வணக்கம்! சொல்லுங்க…”
“வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?”
“அதில்லைங்க”
“எது இல்லை?”
“யார் பேசுறது”
“நீங்கதான் பேசறீங்க”
“இது பழய ஜோக்…சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?”
“போன்ல இருந்துதான் பேசறேன்”
” சரியா கேக்கல உங்க டிவி வால்யூமை குறைங்க”
“ஆன் பண்ணாத டிவிக்கு எப்படி வால்யூமை குறைக்கிறது”
“சரி என்ன பாட்டு வேணும்?”
“சினிமா பாட்டுதான்”
“சரி எந்த படத்துல இருந்து?”
“சினிமா படத்துல இருந்துதான்”
“அய்யோ!”
“அய்யோ இல்லீங்க.. அய்யா படத்திலிருந்து!”
“சரி என்ன பாட்டு வேணும்?”
“சினிமா பாட்டுதான்”
“அய்யோ முடியல..    அய்யா படத்திலிருந்து என்ன பாட்டு போடணும்னு நீங்க சொன்னாத்தான் நா போட முடியும்”
“அத நீங்க அய்யாகிட்டல்ல கேக்கணும்?”
“எந்த அய்யாக்கிட்ட?”
“எந்த அய்யானுக்கூட தெரியாமதான் இப்ப என்கிட்ட பாட்டு போடப்போறேன்னு சொன்னிங்களா?”
……………
“ஹலோ!”
……………
“ஹலோ!”
Related Posts Plugin for WordPress, Blogger...