கல்யாண பெண்ணை காணோம்

1.தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்தில் விழிப்பீங்க
ஆபீஸ்லேயா? வீட்லேயா?

2.தாத்தா: இனிமே கம்ப்யூட்டர் படிச்சா தான் வேலை கிடைக்கும்
அப்ப நீ படிச்சா கிடைக்காதா..?

3.மருந்து பாட்டிலை கையில் வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுகிறீங்க?
டாக்டர் தான் தலை வலிச்சா இதை எடுத்து தடாவனூன்னு சொன்னார்.

4.படம் முழுக்க ஹீரோ ஒரு பெஞ்ச்சில உட்காருந்து வசனம் பேசிக்கிட்டு இருக்காரே...
ஏன்?
"அவரு பெஞ்ச் டயலாக் பேசுறாராம்...

5.என்னங்க இது கல்யாண மண்டபத்துல பெண்ணை காணோம் தேடிகிட்டு இருகாங்க
நன் தான் அப்பவே சொன்னேனே... பெண் இருக்கிற இடமே தெரியாதுன்னு.

6.என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது அவபேசஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்.
"யோவ் பாங்க்ல வந்து ஏன்யா இதை எல்லாம் சொல்றே"
"நாம கஷ்டத்தை சொன்ன தான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க"

7.இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ?
ஏன் கேக்குறிங்க ?
போர்ட்ல அளவு சாப்பாடுன்னு எழுதாம , "களவு சாப்பாடு" - ன்னு எழுதியிருகாங்களே!

8.தலைவருக்கு வந்திருகிறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே ??
"அரசியல் ஒரு சாக்கடை-ன்னு அவர் தான் அடிக்கடி சொல்றாரே "

9.நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
Related Posts Plugin for WordPress, Blogger...