பட்டாசுக்கடை நகைச்சுவை வெடி ?

1.அது என்ன வீரப்பன் வெடி ?

மற்ற வெடியை வெடிச்சா கந்தக வாசம் வரும். .. இந்த வெடியை வெடிச்சா சந்தன வாசம்
வரும் *
_________________________________________________________________________________________________

2.அது என்ன வீரப்பன் வெடி ?

பத்தவெச்சா அது பாட்டுக்குப் பேசாமலே இருக்கும்.  திடீர்னு நாம எதிர்பார்க்காத
நேரத்துல வெடிச்சிடும் *
_________________________________________________________________________________________________

3.அது என்ன வீரப்பன் வெடி ?

இது வெடிக்கற சத்தம் போலீஸ் காரங்க தவிர, மத்த எல்லோருக்கும் கேட்கும் *
_________________________________________________________________________________________________

4.அது என்ன வீரப்பன் வெடி ?

ஒரே இடத்தில் வெடிக்காம இடம் மாறி மாறிப் போய் வெடிச்சுக்கிட்டே இருக்கும் *
_________________________________________________________________________________________________

5.எல்லா வி.ஐ.பி-யும் ஒரே இடத்துல கூடி, வர்ற ராக்கெட் வெடியை அண்ணாந்து
பார்த்துக்கிட்டிருக்காங்களே. .. என்னவாம். .?

அதுவா. .. வீரப்பன் அதுல வெச்சு ஏதோ காஸெட் அனுப்பியிருக்கானாம் *
_________________________________________________________________________________________________

6.என்ன இது, போலீஸ்காரங்கள்லாம் கூட்டமா சந்தனக்காட்டுக்குப் போறhங்க.. .
வீரப்பனைப் பிடிக்கவா.. .?

இல்லீங்க.. . வீரப்பன் கிட்டே தீபாவளி மாமூல் வாங்கறதுக்கு *
_________________________________________________________________________________________________

7.அப்பா. .. தீபாவளிக்கு நீங்க வைரமோதிரம் செய்து போடாம உங்க மாப்பிள்ளை இனி
இங்கே வரவே மாட்டாராம். ..

நிஜமாவா.. .? ரொம்ப சந்தோஷம். .. அப்புறம் முடிவை மாத்திக்க மாட்டாரே ?
_________________________________________________________________________________________________

8.என்ன இது. கூட்டணி வெடின்னு சொன்னீங்க.  ஆனா, இந்தக் கட்டுல ஒரே ஒரு வெடிதான்
வெடிக்குது.

என்ன செய்யறது.  கூட்டணில அந்த ஒரு வெடிக்கு மட்டும்தான் எல்லா பவரும்.
_________________________________________________________________________________________________

9.கள்ளக் கணக்கு எழுதறதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப் போயிடுச்சு.

எதைச் சொல்றீங்க ?

தரைச் சக்கரத்துக்கு பஞ்சர் ஒட்டியதாக கணக்குக் காட்டியிருக்காங்க *
_________________________________________________________________________________________________

10.சங்கு சக்கரம் மாதிரி நீ வளைய வளைய வர்றதையும் மத்தாப்பு மாதிரி நீ
சிரிக்கிறதையும் பாத்துட்டு, ராக்கெட் வேகத்துல என்னை லவ் பண்றேன்-னு  அந்தப்
பட்டாசுக் கடைக்காரர் பெண்ணுக்கு லவ் லெட்டர் எழுதினியே.. . என்ன ஆச்சு ?

புஸ்வாணமாதான் *
_________________________________________________________________________________________________

11.பட்டாசை வெச்சுக்கிட்டு எதுக்கு ஜெனரேட்டரைப் போடறhரு.. ?

எலெக்ட்ரிக் பட்டாசாம். .. கரண்ட் கட்டாம் *
_________________________________________________________________________________________________

12.அனுமதி இல்லாம பட்டாசுக்கடை வெச்சிருக்கீங்களே. .. அதிகாரிங்க வந்து கேட்க
மாட்டாங்களா ?

அனுமதி வாங்கி கடை வெச்சா மட்டும்  அதிகாரிங்க வந்து கேட்காமலா இருக்கப்
போறhங்க *
_________________________________________________________________________________________________

13.மோதிர விரல்லே தேள் கொட்டிடுச்சுன்னு மாப்பிள்ளை சந்தோஷமா குதிக்கிறhர்.. .

ஏன் ?

விரல்வீங்கிப் போச்சாம். .. தீபாவளிக்கு மாமனார் பெரிய மோதிரமாத்தான் போட
வேண்டி வருமாம் *
_________________________________________________________________________________________________

14.நாம அரசியல் பேசினது போதும். .. கொஞ்சம் ஆன்மீகம் பேசுவோமே.. . வாழ்க்கைலே
ரொம்பவும் ஒட்டிக்காம பட்டதும் படாததுமா தாமரை இலை தண்ணீர் போல. ..

த.மா.கா-லே சிதம்பரம் போலன்னு சொல்லுங்க. ..*
_________________________________________________________________________________________________

15.இதுதாங்க கிரிக்கெட் வெடி *

இதுல என்ன ஸ்பெஷல். ..?

பெட் கட்டினாதான் வெடிக்கும் *
_______________________________
Related Posts Plugin for WordPress, Blogger...