நாய் சேகர்

1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் என்ன?

இல்லை நான் லாரி.


2. தலைவரே! நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை
கமிஷன் அமைக்கறாங்களாம்.

விடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன
வித்தியாசம்?

அவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.


4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்
அவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே?

ஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட
சிநேகம் இருக்குமோனு டவுட்.


5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

ஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.


6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.

அப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா?


7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே?

அட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட
மாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...

அதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா?


9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே?

சும்மாவா? தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே?


10. தலைவரே! கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே?

சரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு
போராட்டம் பண்றாரே?

அவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.

ஏன்? அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா?


13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்?

முதலிரவு-ஹனிமூன் டூர்.

14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்?

அவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே?

ரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.
இன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு?16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்
வந்திருக்காரே?

“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு
தருவாங்கனு நினைச்சுட்டாராம்.
Related Posts Plugin for WordPress, Blogger...