எமனுக்கு என்னோட வணக்கம்!!

எமலோகத்தில் T.R~#~#~#~எமன்: சித்திரகுப்தா! அடுத்து யார்?
சித்திரகுப்தன்: அவன் பெயர் T.R

எமன்: என்னது இப்படி ஒரு பெயரா? தமிழ் இப்படி எல்லாமா மாறி விட்டது
சித்திரகுப்தன்:இல்லை எம தேவா! அது அவன் பெயர் சுருக்கம்.. இவன் கொஞ்சம் விவகாரமானவன். ஜாக்கிரதையாய் இருங்கள்

எமன்: என்னது விவகாரமானவனா ? அப்படி என்ன செய்தான்
சித்திரகுப்தன்:பொதுவாக எங்காவது கொலை நடந்தால் அதை படம் பிடிப்பார்கள். ஆனால் இவன் படம் எடுத்து அனைவரையும் கொலை செய்கிறான்.

எமன்: ம்ம்ம்ம் வரச்சொல் அவனை..
[ T.R உள்ளே வருகிறார்]

டி. ஆர்:

நா வந்தாலே
எல்லோருக்கும் கலக்கம்
எமனுக்கு என்னோட வணக்கம்!!
எனக்கு புதுச்சதது தயிரு
எமன் கிட்ட இருக்கு பாசக் கயிறு
மழை பெஞ்சா புடிப்போம் குடை
எமன் போட்டிருக்கிறது கிழிஞ்ச உடை..
எங்க பட்டி சுட்டது வடை
நா கேள்வி கேட்டா யாருக்கு தெரியாது விடை…

எமன்:

நிறுத்து விடு இல்லை
அறுத்து விடுவேன் உன் நாக்கை…


டி. ஆர்: எமா எனக்கு நரகமா இல்லை சொர்க்கமா?

சித்திரகுப்தன்: அதை நாங்கள் முடிவு கொள்வோம் நீ அமைதியாய் இரு..

டி. ஆர்: தட்டி பார்தேன் தொட்டாக் குச்சி தாளம் வந்தது..


T.R பாட ஆரம்பிக்க

எமன்:இவனை சொர்க்கததில் விட்டால் பேசியே அதை நரககமக்கி விடுவான். எனவே இவனது நாக்கை வெட்டி நரகத்தில் அடையுங்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...