அறுபது வயது

தமிழறிஞர் ஒருவர் படிப்பறிவில்லாத முதியவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அறிஞர்:என்ன வியாபாரம் செய்றீங்க?
முதியவர்:வாயப்பயம்.
அறிஞர்:எந்த ஊர்?
முதியவர்:கெயக்கே.
அறிஞர்:ஏன் இந்த வயதில் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?
முதியவர்:எதோ பொயப்பு.
அறிஞர்:தமிழை இப்படியா பேசுவது?
முதியவர்:என்ன செய்ய?பயக்கமாப் போச்சு.
அறிஞர்:(கோபத்துடன்)போய்யா கெயவா.
***********************************************************************
”அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா”
‘சரி,அதனாலென்ன?’
”எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி…..”
‘இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?’
”அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!”
***********************************************************************
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
***********************************************************************
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா…அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
***********************************************************************

Related Posts Plugin for WordPress, Blogger...