வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா?


1. ன் காதலர் சலவைத்தொழிலாளியா?

ஏன் கேட்கறே?

உன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா?ன்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,?
 -----------------------------------------------------------------
2. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?
சம்பளம் கைக்கு வந்ததும்...

சம்பளம் எப்போ  கைக்கு வரும்?

கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?
 -----------------------------------------------------------------
3.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே?

தமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு  பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...

 -------------------------------------------------------------------
4.பீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க?

டாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது
------------------------------------------------------------------
5.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...?

ஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...
-----------------------------------------------------------------
6.  லைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...

டாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.
-----------------------------------------------------------------
7.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன்  அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.

சோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே  பார்க்கறதுக்கு என்ன?

Related Posts Plugin for WordPress, Blogger...