இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்1. நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,வெரி ஸ்வீட் கேர்ள்ஸ். ஜாலியா கடலை போடலாம்.எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்..
ஏர்டெல் -121
ஏர்செல் – 55333
ரிலையன்ஸ் – 369
பி எஸ் என் எல் -123
வோடஃபோன் -111
இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,நமக்குள்ளயே இருக்கட்டும்.
————————————
2. ஒரு குட்டி எலி ஒரு பெரிய பூனை கிட்டே மாட்டிக்கிச்சு,அது தன் உயிரைக்காபாத்திக்க , ” பூனை அண்ணே பூனை அண்ணே,நான் எங்கம்மா அப்பாவுக்கு ஒரே பையன்,என்னை  விட்டுடுங்கன்னு கதறுச்சு,அதுக்கு அந்த பூனை என்ன சொல்லிச்சு?தெரியுமா?
மியாவ்னு..
————————————
3. நல்ல நேரம், கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?
எதிர்ல உள்ள ஃபிகர் போட்டிருக்கற தாவணி காத்துல வி__னா அது நமக்கு நல்ல நேரம்.அந்த டைம்ல கரெக்ட்டா நம்ம கண்ணுல தூசி விழுந்தா அது நமக்கு கெட்ட நேரம்.
————————————

4. ஜட்ஜ் – உனக்கும்,உன் புருஷனுக்கும் டைவர்ஸ் தர முடியாதும்மா…
லேடி – ஏன் சார்?
ஜட்ஜ் - டைவர்ஸ் தரனும்னா வலுவான காரணம்வேணும்மா.
லேடி – என் புருஷன் ஒரு குடிகாரன் சார்.
ஜட்ஜ் – செல்லாது செல்லாது,நாட்ல 90% பேரு குடிகாரப்பசங்கதான்.
லேடி – என்னை ___ படத்துக்கு கூட்டிட்டுப்போய் கொல்லப்பாத்தாரு
ஜட்ஜ் - அவ்வளவு பெரிய கொடுமைக்காரனா?ஓக்கே டைவர்ஸ் சேங்க்‌ஷன்.
————————————
5. என்னதான் சிங்கம் மாதிரி கம்பீரமா ,தனியா பஸ் ஸ்டேண்ட் போனாலும் கடைசில பஸ் வந்தா பன்னி மாதிரி கூட்டமா ஏறிதான் ஆகனும்.
————————————
6. காதலியின் வீட்டுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் தவறு செய்து விட்டோமோ என குற்ற உணர்ச்சி… ஏன்னா அவளோட தங்கச்சி அவளை விட செம ஃபிகர்.. (இந்த மாதிரி கவிதை எழுதுனா செட் ஆனதும் அப்பீட் ஆகிடும்.)
————————————
7. ஒரு விடுகதை, 1  – 11 – 111 இந்த 3க்கும் என்ன வித்தியாசம்?
1 – தனியா இருக்கு.
11 – ஜோடியா இருக்கு
111- ஃபேமிலியா இருக்கு
யாரப்பா அது கல்லை எடுக்கறது?
————————————
8. ஃபிரண்டுக்கும், லவ்வருக்கும் என்ன வித்தியாசம்?
ஃபிரண்ட் கிட்டே நீதான் என் பெஸ்ட் ஃபிரண்டுன்னு சொல்லலாம்
லவ்வர் கிட்டே நீதான் என் பெஸ்ட் லவ்வர்னு சொல்ல முடியுமா?

Related Posts Plugin for WordPress, Blogger...