ரஷ்யாவும், சீனாவும்

ராணுவச் சிரிப்பு
அது ரஷ்யாவும், சீனாவும் அரசியல் ரீதியாக பகை பாராட்டியிருந்த நேரம். இரண்டு நாடுகளும் ஒன்றை ஒன்று ராணுவ பலத்தால் அழித்து விடுவதாக சவாலிட்ட சமயம். க்ரெம்லின் மாளிகைக்கு ஒரு பெரிய பார்சல் வருகிறது. ரஷ்ய அதிபர் பிரெஸ்னேவ் அதைத் திறக்கிறார். ஒரு பை முழுவதம் பீன்ஸ் விதைகள்.

அதோடு சீனாவின் மாவோவிடமிருந்து ஒரு கடிதம். "இப்படித்தான் படை படையாக உங்களை வந்து தாக்குவோம்" என்று கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

பிரெஸ்னேவ் உடனே பதிலுக்கு ஒரு பெரிய பையில் கோதுமை மாவை பார்சலில் சீனாவிற்கு அனுப்புகிறார். அதனுடன் இணைப்பாக ஒரு கடிதம். "இப்படித்தான் உங்கள் படையைப் பொடிப் பொடியாக்கி விடுவோம்”

*****

ஒரு அமெரிக்க ராணுவப் பயிற்சி முகாம். விமானப்படை வீரர்கள் விமானத்திலிருந்து பாரசூட் மூலம் கீழே குதிக்க வேண்டும்.

ஒரு வீரன் பதற்றத்துடன் சொன்னான். "தலைவரே, எனது பாரசூட் திறக்க மாட்டேன் என்கிறது"

தலைவர் சொன்னார். " கவலைப்படாதே! இது வெறும் பயிற்சிதானே!"
எங்கேயோ படித்த ஜோக்

ரஷிய பஸ் ஸ்டாப். பேப்பரை விரித்தபடி நிற்கும் ஒருவரிடம் பவ்வியமாக மற்றவர் கேட்கிறார். ‘சார் நீங்க கேஜிபியா?’
‘இல்லை’ என்கிறார் திருவாளர் பேப்பர்.
“உங்க வீட்டம்மா கேஜிபியா” இது பவ்வியம்.
“இல்லை” என்கிறார் திருவாளர் பேப்பர் கொஞ்சம் சிடுசிடுவுடன்
“அப்ப உங்க பக்கத்து வீட்டுல யாராச்சும்…”
“இல்லைய்யா”
“உங்க உற்றார் உறவினர் …”
“இல்லைய்யா இல்லை”
இப்போது திருவாளர் பவ்யம் சீறுகிறார், “பிறகு ஏன்யா எருமை மாடாட்டம் என் காலை மிதிச்சுட்டு நிக்கிறே காலை எடுடா தடிமுண்டம்”
   
Related Posts Plugin for WordPress, Blogger...