7 உலக அதிசயங்கள்
1. சீனப் பெருஞ்சுவர்: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி, படிப்படியாகக் கட்டி முடிக்கப்பட்ட, உலகின் மிகநீண்ட மதில்சுவர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து மத்திய ஆசியா வரை அமைந்துள்ளது. உலக பாரம்பய மையமாக யுனெஸ்கோவால் 1986-ல் தேர்வு செய்யப்பட்டது. இப்போது வாக்கெடுப்பு மூலம் பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்று 7 அதிசயங்களில் இடம்பெற்றுள்ளது.


2. ஜோர்டானின் பெத்ரா: ஜோர்டான் தலைநகர் அம்மானில் இருந்து தெற்காக 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெத்ரா. இளஞ்சிவப்பு நிறத்தில் காண்போரை வியப்படையச் செய்யும் வகையில் மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்ட வழிபாட்டிடங்களும், கோபுரங்களும் அமைந்த புராதன சின்னம் இது. வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன நகரமான பெத்ரா, இந்தியா, சீனா மற்றும் தெற்கு அரேபியாவை, எகிப்து, சியா, கிரீஸ் மற்றும் ரோம் நகரத்துடன் இணைத்த, வர்த்தக மையமாகத் திகழ்ந்த நகரம்.
3. பிரேசிலின் யோ டி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்து ரட்சகர் சிலை: 38 மீட்டர் உயரமும், 700 எடையும் கொண்ட பிரமாண்டமான இயேசு கிறிஸ்து சிலை இது. ஆண்டுக்கு 18 லட்சம் பேர் வந்து செல்லும் சுற்றுலாத்தலம். பிரேசிலின் கார்கோவடோ மலையில் 710 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பிரேசிலின் அடையாளமாகத் திகழும் இந்தச் சிலை 1931-ம் ஆண்டு திறக்கப்பட்டது.


4. பெரு நாட்டின் “மச்சுபிச்சு’ கட்டுமானம்: இன்கா நாககம் உச்சத்தில் இருந்தபோது உருவாக்கப்பட்ட அற்புத நகரம். கடல்மட்டத்தில் இருந்து 2430 மீட்டர் உயரத்தில், மலைக்குன்றுகளின் மீது உருவாக்கப்பட்ட பிரமாண்ட நகரம். பெரு நாட்டின் உருபம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த புராதனக் கட்டமைப்பைக் காணும்போது வியப்பால் விழிகள் விவதைத் தடுக்க முடியாது.


5. மெக்சிக்கோவில் உள்ள மாயர்களின் நகரமான சிச்சன் இட்சா: மெக்சிக்கோவில் உள்ள யுட்டகன் தீபகற்பத்தில் கி.பி. 500 வாக்கில் கட்டப்பட்ட நகரம் சிச்சன் இட்சா. மிகப் பிரமாண்டமான பிரமிடு, வானியல் ஆய்வு மையம், போர்வீரர்கள் கோயில் போன்ற புராதன கட்டுமானங்கள் உள்ளன. மாயர்களின் நகரம் இது.


6. ரோம் நகல் உள்ள கொலாசியம்: 50 ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க கட்டப்பட்ட அரங்கு. ரோமப் பேரரசின் பெருமையைப் பறைசாற்றுவது. கி.பி. 80-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த அரங்கு 500 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்தது. “ஆம்பிதியேட்டர்’ என அழைக்கப்படும் “வட்ட அரங்கு’ வகையைச் சேர்ந்தது இது.


7. தாஜ்மகால்: முகலாய அரசன் ஷாஜகானால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. உலகெங்கும் காதல் சின்னமாகப் போற்றப்படுகிறது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சனிக்கிழமை நடைபெற்ற வண்ணமயமான நிகழ்ச்சியில் 7 உலக அதிசயங்கள் அறிவிக்கப்பட்டன. தாஜ்மகாலும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்ததை, இந்தி நடிகை பிபாசா பாசு, அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் நடித்த பென் கிங்ஸ்லி ஆகியோர் மேடையில் அறிவித்தனர்.Related Posts Plugin for WordPress, Blogger...