பல்லி விழும் சாஸ்திரம்

நண்பன்1-''மச்சான் ஏன்டா ரொம்ப சோகமா இருக்கே?''
நண்பன்2-''நேத்து என் ஆளோட மொபைல் வாங்கி என் பேரை எப்படி ஸ்டோர் பண்ணிருக்கான்னு பார்த்தேன்,அதுல இருந்து மூட் அவுட்டுடா.''
நண்பன்1-''அப்படி என்ன பேர்ல மச்சான் ஸ்டோர் பண்ணிருந்தா?''
நண்பன்2-'' டைம் பாஸ் நம்பர் 15-ன்னு ஸ்டோர் பண்ணிருக்காடா மாப்ளே!!''
 ---------------------------------------


அழகான 2 பொண்ணுங்க போய்கொண்டு இருந்தாக!
பின்னாடியே 2 பசங்க போனங்க!
உடனே 2 பொண்ணுங்களும் ஆளுக்கு 1 பையன் கையில ராக்கி கட்டிட்டு "அண்ணா" னு சொல்லிச்சாம்!
பசங்க என்ன சொல்லியிருப்பாங்க ??????
டேய் மச்சான்! "என் தங்கச்சிய நீ கட்டிக்க
உன் தங்கச்சிய நான் கட்டிக்கிறேன்"
2 பொண்ணுகளும் ????? !!!! .....
---------------------------------------


1 ஏம்பா சர்வர், சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே, இதுக்கென்ன அர்த்தம்?
சாரி சார், எனக்கு பல்லி விழும் சாஸ்திரமெல்லாம் தெரியாது."
 -------------------------------------
2 ஆஸ்பத்திரியில் வந்து ஒருத்தன் கத்தியால குத்திட்டுப் போற அளவுக்கு எப்படிய்யா அலட்சியமா இருந்தீங்க?"
டாக்டர்தான் ஆபரேஷன் பண்றாரோன்னு நினைச்சிட்டேன் சார்!
 ---------------------------------------
3 அஞ்சு விரலுக்கும்தான் அஞ்சு மோதிரம் போட்டாச்சே.... மேற்கொண்டு மாப்பிள்ளை என்ன கேக்கறார்?"
மோதிரம் போட்டுக்க இன்னும் ரெண்டு விரல் வேணும்னு கேக்கறார்...!
---------------------------------------
4 ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?
ஆசிரியர் : ?!?!
---------------------------------------
Related Posts Plugin for WordPress, Blogger...