செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்திவிடுங்கள்.

ஒரு L.K.G பெண்ணு கவனக்குறைவா Road Cross பண்ணிச்சாம்!

Traffic Police : நான் விசில் அடிச்சும்,கை காட்டியும் ஏன் பாப்பா கண்டுக்கல?

L.K.G Girl : நான் ஒண்ணும் அந்த மாதிரி பொண்ணு இல்ல!

சுந்தர் :அணிலுக்கும் தபாலுக்கும் என்ன சம்பந்தம்?
சுகிரி :ரெண்டுக்கும் 'பின்' கோடு உண்டு.

நான் செய்தித்தாளில் படித்தேன்:
பீர், விஸ்கி போன்ற மதுபானங்களை குடித்தால், குடலில் புற்றுநோய் வருமாம் !.
ஆதலால் எனது அருமை நண்பர்களே,
இன்றுமுதல் செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்திவிடுங்கள்.

அப்பாவும் மகனும் பேசிக்கொண்டது;
உன்னை விட சின்னப் பையனை எதுக்குடா அடிச்சே? கையை நீட்டுடா.....
நீங்களும் அதே தப்பை செய்யாதீங்கப்பா..........

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"

 "நம் போர்க்கள வியூகத்தை உடனடியாக மாற்றியாகணும் தளபதி..."
"அப்படியானால் இந்தமுறை நான் முதலில் ஓடட்டுமா மன்னா...?"

Smile
வயித்த வலிக்குதுபா...."
"வயித்துல ஒண்ணும் இல்லைனா அப்படித்தான் வலிக்கும்...."
"அப்ப, நேத்து நீ தலைவலினு சொன்னியே!"
Tongue
என் மனைவியைப் பார்த்து எந்தக் கேள்வியும் கேட்க முடியல..."
"ஏன்...?"
"கேள்வி நேரம் முடிஞ்சிடுச்சுன்னு எழுந்து போயிடறா..Related Posts Plugin for WordPress, Blogger...