மாபெரும் அதிர்ஷ்டசாலி

அன்பான
என் நண்பனுக்கு
அழகிய
சிறு கவிதை.

உன்
நட்பில்
அன்பில்
கண்ணியத்தில்
உயிர் கரைகிறேன்........

பரவசத்தின்
பூரிப்பில்
காற்றில்
மிதக்கிறேன்..........

உன்
நட்பின்
அருகாமையின்
ஒவ்வொரு நொடியும்
நிமிடமும்
என் வாழ்க்கை
பக்கங்களின்
வரலாறுகளாய்
உணர்கிறேன்.

காலை
பனித்துளியை விட
மலரின் மணத்தை விட
உன் இதயம்
மென்மையானது
பரிசுத்தமானது.
அதில் எனக்கும்
இடமளித்தமைக்கு
நன்றிகள்

உனக்கு.
உன் நட்பு
இறுதிவரை
கிடைத்தால்
மாபெரும்
அதிர்ஷ்டசாலி
நான்......................

முகம் தெரியா நண்பணின்
முகத்தில் வினாடி நேர
வியப்பை பார்க்க‌
விரல்களின் அசைவுகள்
வரிசை படுத்துகின்றன....
அவனை.........

உயிரில் ஒன்றானவன்;

உடலால் இரண்டானவன்;

இலக்கணத்தில் படர்கை என‌
மூன்றானவன்.........;

உறவிலே நண்பன் என‌
நான்கானவன்..........

பெயரிலே எழுத்து
எண்ணிக்கையில்
ஐந்தானவன்............;

விளித்து அழைக்கும் போது
"அருமைத்தோழா" என‌
ஆறானவன்....;

அன்பிலே அவன் நூறானவன்...
Related Posts Plugin for WordPress, Blogger...