தமிழ் பழமொழிகள்

1 அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
2 அகல உழுகிறதை விட ஆழ உழு.
3 அகல் வட்டம் பகல் மழை.
4 அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
5 அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
6 அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
7 அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
8 அடக்கமே பெண்ணுக்கு அழகு.
9 அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
10 அடாது செய்தவன் படாது படுவான்
11 அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
12 அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்
13 அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
14 அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
15 அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
16 அந்தி மழை அழுதாலும் விடாது.
17 அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
18 அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
19 அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
20 அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
21 அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
22 அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
23 அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
24 அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
25 அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
Related Posts Plugin for WordPress, Blogger...