பெரியவங்க சொன்னா சரியாகதான் இருக்கும்

*******************************

என்னம்மா இத்தனை தொட்டுக்க இருக்கும் பொழுது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லேட் போட்டுக்கிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார் எவ்வளோதான் நீ செய்வாய் வா சேர்ந்து சாப்பிடலாம்!

இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆலேட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க அதுவும் சின்ன வெங்காயம் வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பராக இருக்கும் என்று சொல்வீங்க அதுக்குதான்.


இப்படி சொன்னா கல்யாணம் ஆகி ஆறுமாதம் என்று அர்த்தம்!!!

**********************

என்னம்மா இன்னைக்கு ஸ்பெசல்!

சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு ஆம்லேட் தொட்டுக்க!

அவ்வளோதானா?

முடியலைங்க!


இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!

-----------------------------------------------------------------------
என்னம்மா இது இத்தனோன்டு இருக்கு, முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே உடைச்சு புல் பாயிலா ஊத்தி இருக்க?


முட்டை என்னா நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு அதுக்கு நான் என்னா செய்ய! சும்மா குறை சொல்லிக்கிட்டு இருக்காம, தொட்டுக்கிட்டு சாப்பிடுங்க!


இது ஒரு மூன்று வருடம் ஆனது!

***********************************

என்னா இது ஆப் பாயில் போட்டு இருக்க நான் இத சாப்பிடவே மாட்டேன் என்று தெரியும்ல!

ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போய்டாது, சாப்பிடுங்க ஊருல இல்லாத அதிசய புருசன் எனக்குன்னு வந்து வாச்சி இருக்கு! இது ஒரு 4ல் இருந்து 5 வருடம் ஆன ஜோடிங்க!


******************************

என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?

சாதம் வைத்து இருக்கேன், பிரிஞ்சில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு ஆம்லேட் போட்டு சாப்பிடுங்க!

இது ஒரு 7 வருடம் ஆனதுங்க!


*******************************

என்னம்மா இன்னை என்ன சமையல் செய்யனும்!

அதையும் நான் தான் சொல்லனுமா? எனக்கு என்னா பிடிக்கும் என்று தெரியாதா? அதை செய்யுங்க!


இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!!!

********************************

இதில் கவனிச்சீங்கன்னா அவன் என்னம்மா என்று சொல்லுவது மற்றும் மாறவே இல்லை:)

ஆண்கள் வைக்கும் அன்பும் பாசமும் என்றுமே மாறாது என்றும் ஆசிப் அண்ணாச்சி சொல்கிறார், பெரியவங்க சொன்னா சரியாகதான் இருக்கும் போல. (அண்ணாச்சி நீங்க பொடிசு இல்ல, பொடிசு இல்ல:) என்னை மன்னிக்கலாம்!!!)
Related Posts Plugin for WordPress, Blogger...