உலகின் மிகப்பெரும் செல்வந்தர் டவுட்டு

1. மளிகைக் கடையில் முதலில் எண்ணெய் விற்றால், அன்றைய வியாபாரம் நன்றாக இருக்காதாம். எண்ணெய்க் கடையில் முதலில் என்ன விற்பார்கள்?

2. ஸ்ரீ தனலட்சுமி எந்திரம் வாங்கி வீட்டில் வைத்தால், செல்வம் பெருகுமாம், டிவியில் சொன்னார்கள். தனலட்சுமி எந்திரத்தைத் தயாரிப்பவரே அவற்றை வைத்துக் கொண்டால், அவருக்கு செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டி, உலகின் மிகப்பெரும் செல்வந்தர் ஆகிவிடலாமே. ஏன் விற்கின்றார்?

3. யாசீன் சூரா ஓதினால், காய்ச்சல் நீங்குமாம். எந்த சூரா ஓதினால் கேன்சர் குணமாகும்?

4. பிளாட்பாரங்களில் அதிர்ஷ்டக்கல் விற்பவர்களைத் தேடி அதிர்ஷ்டம் வருவதில்லையே. ஏன்?

5. தலித்துகள் செல்லும் சாலைகள் தீட்டாகிவிடும் என்றால், அவர்கள் வேலை செய்யும் வயலும், விளைச்சலும் தீட்டாகாதா?

6. ஆக்டோபஸின் கணிப்பின்படி ஸ்பெயின் வெற்றி பெற்றதாம். ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதால் ஸ்பெயின் வெற்றி பெற்றதா? இல்லை, ஸ்பெயின் வெற்றி பெற்றதால், ஆக்டோபஸின் கணிப்பு வெற்றி பெற்றதா?
7. கடையை இரவில் மூடும்போது கடையில் குப்பைகளைக் கூட்டிப் பெருக்கி, அள்ளிப்போட்டால் லட்சுமி போய்விடுமாம். அப்படியானால் லட்சுமி என்பது குப்பைகள்தானா?

8. குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் பாங்கு ஓதவேண்டுமாம். பாங்கு சத்தம் கேட்டு அந்த குழந்தை எழுந்துத் தொழச் செல்லுமா?


Related Posts Plugin for WordPress, Blogger...