டாக்டர் என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை


  அவன் டாக்டரிடம் சொன்னான், "டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?"

   டாக்டர், "நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு ''''இன்று என்ன சமையல்?'''' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்" என்றார்.

  அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து "இன்று என்ன சமையல்?" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, "இன்று என்ன சமையல்?" என்று கேட்டான்.

அவள் சொன்னாள், "ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் ''''மீன் குழம்பு''''ன்னுட்டு".
--------------------------------------

தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு
அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------

முட்டை போடுற கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.
ஆம்லெட் போடுற நமக்கு முட்டை போடத் தெரியாது
------------------------------------



இதையும் படிச்சி பாருங்க

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

  பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான் முதலில் சுத்தமான  மேலும் படிக்க

தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்

   அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?  மேலும் படிக்க




Related Posts Plugin for WordPress, Blogger...