லைட்டா ஒரு குத்து.

1. காலைல ஆபிசுக்கு அரைமணிநேரம் சீக்கிரம் வந்தா கண்டுக்கமாட்டாய்ங்க...அரைமணிநேரம் சீக்கிரம் கிளம்ப மட்டும் பர்மிஷன் வாங்கனும்னு சொல்லும்போது விடத்தோணும் லைட்டா ஒரு குத்து.

2. இங்க அடிக்கிற சூட்டுக்கு ஆபிஸ்ல ஏசி சரியில்லைன்னு ஒரு மாசமா கத்துறேன்... நேத்து வந்த பிகரு வியர்க்குதுன்னு சொன்னதுக்கு உடனே ஆக்சன் எடுத்தாரே அந்த ஜொள்ளுக்கு விடத்தோணும் ஒண்ணு எக்ஸ்ட்ரா.


3. கரீட்டா கிளம்புறதுக்கு பத்து நிமிசம் முன்னாடி வந்து, இதை கொஞ்சம் பார்த்துச்சொல்லுன்னு காஷ்மீர் பிரச்சனை மாதிரி பலவருசமா தீராத ஒரு பிரச்சனையை கொண்டு கைல தருவாரே அப்ப விடத்தோணும் ஒரு டபுள் ஸ்ட்ராங் குத்து.4. வாரந்தோறும் மீட்டிங்னு சொல்லி உள்ளே கூப்பிட்டு வச்சு "புல் அப் யுவர் சாக்ஸ்...
புல் அப் யுவர்சாக்ஸ்" ன்ற டயலாக் தவிர உருப்படியா எதுவும் சொல்லாம எண்ணையே விடாம மூளையை தாளிக்கும்போது விடத்தோணும் ஒரு மைக்டைசன் குத்து.


5. எப்படி பிரின்ட் கொடுக்கறதுன்னு கூட தெரியாம கேட்க கூச்சப்பட்டு "பிரிண்ட் வரலை, உனக்கு வருதான்னு பாரு"ன்னு மெயிலை பார்வார்டு பண்ணுவாரே அப்போ கொடுக்கத்தோணும் மவுசை வச்சு ஒரு குத்து.6. ஓவர் டைம் பார்த்தாவது மன்த் என்ட் க்ளோசிங் பண்ணுன்னு சொல்லிட்டு, ஓவர்டைம்ல கையெழுத்து வாங்கும்போது சந்தேக கேசுல புடிச்சவனை போலீஸ்காரன் கேட்கறமாதிரி விடையே இல்லாத கேள்விகளை கேட்கும்போது விடத்தோணும் ஒரு ட்ரிப்பிள் ஸ்ட்ராங் குத்து.


7. வீக்என்ட்லயும் டை கட்டி பார்மலா வந்து, நான் டேமேஜர்னு காணிக்கிற அதிகாரத்தனத்துக்கு குடுக்கனும் ஒரு ரெட்புல் குத்து.


8. நெட்டுல பத்து நிமிசம் சாட்டிங்ல ரிலாக்ஸ் பண்ணலாம்னு திறந்தா, மூக்குல வேர்த்து ஒரு அசைன்மென்ட்டை கைல கொடுத்து அவருமட்டும் மாத்ருபூமி, என்டிடிவி, ஷேர்மார்க்கெட்டுன்னு டைம்பாஸ் பண்ணும்போது நச்சுன்னு கொடுக்கத்தோணும் ஒரு குத்து.
Related Posts Plugin for WordPress, Blogger...